கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஈடுபட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த மங்களூருவைச் சார்ந்த ஹவுஸ் டிரைவராக பணியாற்றி வந்த சமத் சாலிஹ் என்பவருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தம்மாம் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
11 ஆண்டுகளுக்கு முன்பு, தான் பணிபுரிந்து வந்த வீட்டின் அருகிலுள்ள மற்றொரு வீட்டில் பணிபெண்ணுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதோடு, தடுக்க வந்த சவுதி குடிமகனை கொலையும் செய்தார். குடும்பத்தினர் மன்னிக்காததால், அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.