அமீரகத்தில் டிரைவர்கள் இல்லாத Taxi.. விரைவில் அறிமுகம்

அமீரகத்தில் டிரைவர் இல்லாத டாக்சிகளை இயக்குவது என்ற இலக்கை நோக்கி துபாய் இப்போது ஒரு படி நெருக்கமாக சென்றுள்ளது என்றே கூறலாம். சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ்-ஆதரவு கொண்ட Cruise என்ற நிறுவனம் இரண்டு செவர்லே போல்ட் மின்சார வாகனங்களின் (EVs) இயக்கத்தை துபாய் முழுவதும் Digital Mapping செய்யும் பணியில் செயல்படுத்தி வருகின்றது.

இந்த செயல்முறையானது எதிர்வரும் 2023ம் ஆண்டிற்குள் ஓட்டுநர் இல்லாத டாக்ஸி மற்றும் e-Hail சேவைகளை தொடங்குவதற்கான ஒரு முன்னோடியாகும். இது அமெரிக்காவிற்கு வெளியே குரூஸ் நிறுவனத்தின் சுய- ஓட்டுநர் வாகனங்களை வணிக ரீதியாக இயக்கும் உலகின் முதல் நகரமாக துபாயை உருவாக்குகிறது.

இந்நிலையில் அந்த இரண்டு செவ்ரோலெட் போல்ட் EVகள் ஆரம்பத்தில் ஜுமேரா தெருக்களில் பயன்படுத்தப்பட்டு “சிறப்பு ஓட்டுனர்களால்” இயக்கப்படும். பின் குரூஸின் தொழில்நுட்பமானது இயற்பியல் சூழலின் உயர் தெளிவுத்திறன் கொண்ட வரைபடத்தைப் பயன்படுத்துகிறது.

இது LiDAR, கேமரா மற்றும் பிற சென்சார்களின் தொகுப்புடன் கூடிய சிறப்பு மேப்பிங் வாகனங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தரவுகளை சேகரிப்பதற்காக அவை நகரம் முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. RTAவின் இயக்குநர் ஜெனரலும், நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவருமான மேட்டர் அல் டேயர் கூறியதாவது: “சுயமாக ஓட்டும் குரூஸ் ஆரிஜின் வாகனங்களை இயக்குவதற்கான செயல்பாட்டில் டிஜிட்டல் வரைபடங்களைத் தயாரிப்பது இன்றியமையாதது.

இது அடுத்த ஆண்டு இயக்கப்பட்டாலும் அது குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பயன்படுத்தப்படும். மேலும் 2030ம் ஆண்டிற்குள் இதுபோன்ற 4,000 வாகனங்களை இயக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

மேலும் இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்கள் Gulf tube tamil / WhatsApp Groupல் (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) இணைத்து கொள்ளுங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times