துபாயிலிருந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு சென்ற எமிரேட்ஸ்
ஏர்லைன்ஸ் EK430 ரக விமானம், தனது
பயணத்தின் போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானச் செய்தித் தொடர்பாளர் தற்போது உறுதிப் படுத்தியுள்ளார். தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டபோதும் விமானம் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் பாதுகாப்பாக தரையிறங்கியது, அதன் பயணிகள் அனைவரும் திட்டமிட்டபடி விமானநிலையத்தில் தரையிறங்கினர் என்றும் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது, ஊடகங்களுக்கு எமிரேட்ஸ் அளித்த அறிக்கையில், “ஜூலை 1-ம் தேதி துபாயில் இருந்து பிரிஸ்பேனுக்குச் சென்ற EK430 ரக விமானம் பயணத்தின்போது
தொழில்நுட்பக் கோளாறை
சந்தித்தது” என்று கூறப்பட்டுள்ளது.
மதிப்பீடு மற்றும் பழுதுபார்ப்பதற்காக விமானம் பிரிஸ்பேனில் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 7நியூஸ் பிரிஸ்பேன் செய்தியில், விமானம் புறப்படும் போது விமானத்தின் டயர் வெடித்ததாகவும், அது பிரிஸ்பேனில் தரையிறங்கியதும், அதன் Fuselageல் ஒரு ஓட்டையுடன் தரையிறங்கியதாகவும் கூறியது.
“எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு எப்போதும் எங்கள் முன்னுரிமையாக இருக்கின்றது, “எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் இதுபோன்ற பல முக்கியமான தகவலகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.