இன்று சனிக்கிழமை அதிகாலை தெற்கு ஈரானில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் குறைந்தது ஐந்து பேர் இறந்துள்ளனர் என்றும், 49 பேர் காயமடைந்தனர் என்று மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, பின்னர் அந்த பகுதி 6.3 ரிக்டர் அளவில் இரண்டு வலுவான நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டது.
ஈரானின் வளைகுடா கடற்கரையில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் அவசரகால நிர்வாகத்தின் தலைவர் மெஹ்ர்தாத் ஹசன்சாதே, “பூகம்பத்தில் ஐந்து பேர் இறந்துள்ளனர் … இதுவரை 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று மாநில தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.
அதிகாலையில் தெற்கு ஈரானில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து, அமீரகத்தில் உள்ள குடியிருப்பாளர்கள் இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக வலுவான நில அதிர்வுகளை உணர்ந்ததாக கூறியுள்ளனர்.
குடியிருப்பாளர்கள் அருகிலுள்ள வீதிகளில் கூடும் அளவிற்கு இந்த நிலநடுக்கம் தீவிரமாக இருந்துள்ளது. இன்னும் சில அமீரக வாசிகள் நிலநடுக்கத்தை உணர்ந்து தூக்கத்திலிருந்து எழுந்ததாகவும், வீட்டில் உள்ள பொருட்கள் குலுக்குவதைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
பலர் – துபாய் மற்றும் ஷார்ஜாவிலிருந்து அபுதாபி மற்றும் ராஸ் அல் கைமா வரை – சமூக ஊடகங்களில் இந்த இரு நிலநடுக்கம் குறித்து வீடியோக்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்து கொம்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Earthquake strikes Dubai and various parts of UAE
— MIRCHI9 (@Mirchi9) July 1, 2022
pic.twitter.com/mXJ6OXioFY
சில ட்விட்டர் பயனர்கள் வெகு சில நொடிகளுக்கு நடுக்கத்தை உணர்ந்ததாகக் கூறினாலும், மற்றவர்கள் “5 நிமிடங்கள் வரை” அந்த நிலநடுக்கம் நீடித்ததாகக் கூறினர். அமீரகத்தில் பல ஆண்டுகளாக வசித்து வரும் நீண்ட கால குடியிருப்பாளர்கள், இந்த நிலநடுக்கம் இதுவரை உணர்ந்ததை விட வலிமையான ஒன்று என்று குறிப்பிட்டனர்.
அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அளித்த தகவலின்படி, சனிக்கிழமையன்று தெற்கு ஈரானில் 4.2 முதல் 6.3 வரையிலான எட்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் இன்று ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்கள் முறையே 1.32 மற்றும் அதிகாலை 3.24 மணிக்கு 6.3 ரிக்டராக அளவிடப்பட்டுள்ளது.
அமீரகத்தில் இந்த நிலநடுக்கங்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்றும் NCM தெரிவித்துள்ளது.
மேலும் பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.