சுரங்கத்தில் உள்ள சிறு குழிகளில், 30க்கும் மேற்பட்டோர் இறங்கி தங்கத்தை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 18 பேர் மாயமாகி உள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், 12 பேரின் உடல்களை மண்ணுக்குள் இருந்து மீட்டனர். 18 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காயம் ஏற்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.