ஜார்ஜ்டவுன்:
பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் முகமது இர்பான் அலியின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் பிரதமர் மோடி சென்றார். அவர், 56 ஆண்டுகளுக்குப் பிறகு கயானாவுக்குச் சென்ற,முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார்.
ஜி – 20 அமைப்பின் உச்சி மாநாடு தென் அமெரிக்க நாடான பிரேசிலில் நடைபெற்றது. மாநாட்டை முடித்த பின், கயானாவுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவரை கயானா அதிபர் முகமது இர்பான் அலி வரவேற்றார். முன்னெப்போதும் இல்லாத வகையில், விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி, கயானா அதிபர் ஆகிய இரு நாட்டு தலைவர்களும் அன்பை பகிர்ந்து கொண்டனர். 56 ஆண்டுகளுக்குப் பிறகு கயானாவுக்குச் சென்ற, முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் பிரதமர் மோடி பெற்றார். அவர், இந்தியா மற்றும் கயானா இடையேயான உறவுகளை வலுப்படுத்த இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து, சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கயானாவில் தரையிறங்கியதும் விமான நிலையத்தில் என்னை வரவேற்க வந்த அதிபர், இர்பான் அலி, பிரதமர் மார்க் அந்தோனி, மூத்த அமைச்சர்கள் மற்றும் பிற முக்கியஸ்தர்களுக்கு நன்றி. இந்த பயணம் நமது நாடுகளுக்கிடையேயான நட்புறவை ஆழப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.