நேபாளம்: மலையேற்றத்தின்போது மாயமான ரஷிய வீரர்கள் 5 பேர் சடலமாக மீட்பு..!

இந்தியா,நேபாளம் இடையே இமயமலை உள்ளது. இமயமலையின் சிகரங்களில் ஏற உலகம் முழுவதில் இருந்து மலையேற்ற வீரர், வீராங்கனைகளும், சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்

இதனிடையே, ரஷியாவை சேர்ந்த 5 மலையேற்ற வீரர்கள் கடந்த 6ம் தேதி நேபாளத்தில் இருந்து இமயமலையின் தளகிரி சிகரத்தை நோக்கி பயணத்தை தொடங்கினர். முகாமில் இருந்து காலை 6 மணிக்கு பயணத்தை தொடங்கிய வீரர்கள் உடனான ரேடியோ தொடர்பு காலை 11 மணியளவில் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மாயமான மலையேற்ற வீரர்களை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், மாயமான மலையேற்ற வீரர்கள் 5 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் நடைபெற்ற தேடுதல் பணியின்போது மலையின் 7 கிலோமீட்டர் உயரத்தில் 5 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. மலை சிகரத்தில் இருந்து கீழே விழுந்து 5 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

1 Comment
  • kalorifer sobası
    October 23, 2024 at 2:34 am

    Keep up the fantastic work! Kalorifer Sobası odun, kömür, pelet gibi yakıtlarla çalışan ve ısıtma işlevi gören bir soba türüdür. Kalorifer Sobası içindeki yakıtın yanmasıyla oluşan ısıyı doğrudan çevresine yayar ve aynı zamanda suyun ısınmasını sağlar.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times