15.9 C
Munich
Sunday, September 8, 2024

பிரான்ஸில் யுபிஐ அறிமுகம்: ஈஃபிள் டவரை காண ரூபாயில் கட்டணம்

Must read

Last Updated on: 7th February 2024, 09:24 pm

பணப் பரிவர்த்தனை தொழில்நுட் பத்தில் இந்தியாவின் யுபிஐ கட்டமைப்பானது உலக அளவில் முன்னுதாரணமாக திகழ்கிறது. இந்நிலையில், தற்போது பிரான்ஸ்நாட்டில் யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, பிரான்ஸின் முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றான ஈஃபிள் டவரில்யுபிஐ பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, ஈஃபிள் டவரை காணச் செல்லும் இந்தியப் பயணிகள், அதற்கான கட்டணத்தை தங்கள் மொபைலில் உள்ள யுபிஐ செயலி மூலம் ரூபாயிலேயே செலுத்த முடியும்.

மத்திய அரசு 2016-ம் ஆண்டுயுபிஐ கட்டமைப்பை நடைமுறைப்படுத்தியது. இந்தியாவில் தற்போது பெரிய வணிக வளாகங்கள்முதல் சிறிய பெட்டிக்கடைகள் வரையில் யுபிஐ பரிவர்த்தனைபிரதானமாக மாறியுள்ளது. இந்நிலையில், வெளிநாடுகளுக்கும் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், பூடான் உள்ளிட்ட நாடுகளில் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ள நிலையில், தற்போது பிரான்ஸிலும் யுபிஐ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரான்ஸில் உள்ள இந்திய தூதரகம் அதன் எக்ஸ் பக்கத்தில், “யுபிஐ பயன்பாட்டை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் இலக்கின்படி, குடியரசுதின கொண்டாட்டத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்றுபாரீஸில் உள்ள ஈஃபிள் டவரில்யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது” என்று தெரிவித்துள்ளது.ஐரோப்பாவில் உள்ள சுற்றுலா மையங்களில், இந்தியபயணிகளுக்கு பயன்படும் வகையில் யுபிஐ பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article