9.6 C
Munich
Wednesday, October 16, 2024

தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்; ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்..!

தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்; ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்..!

Last Updated on: 10th October 2024, 09:04 am

பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, வயது மூப்பு, ரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில், டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

ரத்தன் டாடாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில், ரத்தன் டாடா உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. .தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (அக்.09) இரவு, 11.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 1991 மார்ச்சில் டாடா சன்ஸ் தலைவராக பொறுப்பேற்ற ரத்தன் டாடா, 2012 டிச., 28ல் ஓய்வு பெற்றார். அவரது பதவிக்காலத்தில், டாடா குழுமத்தின் வருவாய் பன்மடங்கு அதிகரித்தது. 1991ல் வெறும் 10,000 கோடி ரூபாய் இருந்த விற்றுமுதல், 2011 – 12ல், 100.09 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்தது. மேலும், ரத்தன் டாடா பொறுப்பில் இருந்தபோது, டெட்லி, கோரஸ், ஜாகுவார் லேண்ட்ரோவர் போன்ற நிறுவனங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இவருக்கு மத்திய அரசு, நாட்டின் உயரிய விருதுகளான, பத்ம பூஷன்(2000) மற்றும் பத்ம விபூஷன்(2008) விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.

பிரதமர் மோடி இரங்கல்

ரத்தன் டாடா மறைவுக்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தனது பணிவு, இரக்கம், மற்றும் நமது சமூகத்தை சிறந்ததாக்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு கொண்டவர் ரத்தன் டாடா. அருடைய இழப்பு பேரிழப்பு என்று பிரதமர் மோடி இரங்கல் செய்தியில் தெரிவித்தார். ஜனாதிபதி திரவுபதி முர்முவும், டாடாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.அவரது மறைவுக்கு, கட்சி தலைவர்களும், மாநில முதல்வர்களும், நடிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜார்கண்ட் அரசு, ஒருநாள் துக்கம் அனுசரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here