புதன்கிழமை ஆஸ்திரியாவில் ரயில் விபத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை காப்பாற்றிய சவுதி குடிமகன் விபத்தில் பரிதாபமாக இறந்தார். இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, தண்டவாளத்தில் சிக்கிய கார் மீது இரயில் மோதியதில் சவூதி நாட்டை சார்ந்து தந்தை மற்றும் அவரது 4 வயது மகனும் உயிரிழந்துள்ளார்.
ஆஸ்திரியாவின் கிட்ஸ்புஹெல் மாவட்டத்தில் டைரோலில் உள்ள செயின்ட் ஜோஹன் நகரில் உள்ள ஈகர் கிராசிங்கில் இந்த கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரயில் கிட்ஸ்புஹெலில் இருந்து செயின்ட் ஜோஹன் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இறந்த சவூதி குடிமகனின் உறவினரான முஹம்மது அல்-ஷரீஃப் இந்த சோகமான செய்தியை முதலில் வெளிப்படுத்தினார்.
அவர் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இறைவா, எனது உறவினர்களில் ஒருவரும் அவரது மகனும் (நான்கு வயது) ஆஸ்திரியாவில் துரதிர்ஷ்டவசமான விபத்தில் இறந்தனர், வழியில் சிக்கிய அவர்களின் கார் மீது ரயில் மோதியது. தந்தை தனது மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் வெளியே அழைத்துச் சென்று, பின்னர் திரும்பி வந்து, குழந்தையை வெளியே எடுத்தார், மேலும் வாகனத்தின் உள்ளே குழந்தை இருக்கையில் இருந்த தனது 4 வயது குழந்தையை வெளியே எடுக்கத் திரும்பியபோது, ரயில் மோதியது. வாகனத்துடன், தந்தை மற்றும் அவரது குழந்தை இறந்தது.
ஊடக அறிக்கைகளின்படி, 35 வயதான சவூதி குடிமகன் ஆஸ்திரியாவில் தனது குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட சென்றிருந்தார். அங்கு நடந்த கொடுரமான விபத்தில் படுகாயமடைந்த தந்தை மற்றும் அவரது குழந்தை இறந்ததாக ஆஸ்திரிய காவல்துறை அறிவித்தது.
செயின்ட் ஜொஹானில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற உடனேயே குழந்தை இறந்தது மற்றும் மருத்துவக் குழுவின் முயற்சிகள் தோல்வியடையவே குடிமகனின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த விபத்தில் அவரது 34 வயது மனைவி மற்றும் 7 மற்றும் 11 வயதுடைய இரண்டு குழந்தைகளும் காயமின்றி தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற்றுக்கொள்ள எங்கள் Gulf Tube tamil / WhatsApp Groupல் (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) இணைந்து கொள்ளுங்கள்..