எம்.பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை தொற்று உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்துள்ளதால், உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையை பிறப்பித்துள்ளது. ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும், 517 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.13 நாடுகளில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கடந்தாண்டை ஒப்பிடுகையில் 160 சதவீதம் அளவுக்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்தது.
இந்நிலையில், குரங்கு அம்மை தொற்று குறித்த சுகாதார அவசர நிலையை உலக சுகாதார நிறுவனம் பிறப்பித்துள்ளது. குரங்கு அம்மை தொற்றை கட்டுப்படுத்த 2022ம் ஆண்டு ஜூலையில் அவசர நிலை பிறக்கப்பட்டு, 2023 மே மாதம் திரும்ப பெறப்பட்டது.
இரண்டு ஆண்டுகளில் 2வது முறையாக அவசர நிலை பிறக்கப்பட்டுள்ளது. எம்.பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை பாலியல் தொடர்பு காரணமாக ஆண்களிடம் இருந்தே பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.