பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் புதிய முதல்வராக மரியம் நவாஸ் ஷெரீப் (Maryam Nawaz Sharif) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதன் மூலம் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையை மரியம் பெற்றார்.
பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் வெளியானாலும், பிரதமர் யார் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் புதிய முதல்வராக மரியம் நவாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த மரியம்?பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் துணைத் தலைவராக உள்ள மரியம் நவாஸ் ஷெரீப் 220 வாக்குகள் பெற்று பஞ்சாப் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.பஞ்சாப் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையை மரியம் நவாஸ் பெற்றுள்ளார். மரியம் நவாஸ் இளமையாகத் தெரிகிறார், ஆனால் அவருக்கு வயது 50.
இந்த தேர்தலில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் தான் மரியம் நவாஸ் ஷெரீப்.
2017-ஆம் ஆண்டில், பிபிசியின் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலில் மரியம் நவாஸ் சேர்க்கப்பட்டார்.நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 11 பெண்களின் பட்டியலிலும் அவர் சேர்க்கப்பட்டார்.
2012-ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த மரியம் நவாஸ், 2013-ஆம் ஆண்டு பாகிஸ்தான் தேர்தலில் PML-N கட்சியின் வரலாறு காணாத வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். அதே ஆண்டில், அவர் PML-N கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.அவரது தந்தை ஷெரீப்பின் அரசாங்கத்தில், பிரதமர் அலுவலகத்தின் இளைஞர் திட்டத்தின் தலைவராக மரியம் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இந்த தேர்வுக்கு எதிரான வழக்கு லாகூர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் மரியம் நவாஸை தகுதி நீக்கம் செய்தது. அதே நேரத்தில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்த குற்றச்சாட்டுகளும் எழுந்தன.எல்லாவற்றையும் கடந்த அவர் இப்போது பஞ்சாபி மாகாணத்தின் முதல்வராக, பாகிஸ்தானின் முதல் பெண் முதல்வராக மாறியுள்ளார்.