பழமைவாத நாடாக கருதப்படும் சவுதி அரேபியாவில் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, நாட்டின் பொருளாதாரத்தில் அவர்களின் பங்கு அதிகரித்துள்ளது.
சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் 2016ம் ஆண்டு விஷன் 2030என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் எண்ணெய் வருவாய் மட்டுமே சார்ந்திருக்கும் நிலையை மாற்றவும் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சவுதி அரேபியாவில் உள்ள வேலைகளில் 36% இடங்களில் பெண்கள் வேலை செய்வதாக சர்வதேச செலாவணி நிதியம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. எல்லை முகவர்களாக, சுற்றுலா வழிகாட்டிகளாக பெண்கள் பணிபுரிகின்றனர்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் அவர்கள் கால் பதிக்க தொடங்கியுள்ளனர். ஆண்கள் இல்லாமல் பெண்கள் வெளியே வரக்கூடாது, வாகனங்கள் ஓட்டக் கூடாது என்ற நிலை மாறி, அரசின் உயர் பொறுப்புகளில் தற்போது இரண்டு பெண்கள் உள்ளனர்.