தம்மாம் விமான நிலையத்திலிருந்து பயணம் செய்யவிருந்த தமிழக பயணியிடம், அதிகாரிகள் பெட்டியில் என்ன இருக்கிறது என்று கேட்டதற்கு, பெட்டியில் வெடிகுண்டு இல்லை என பதிலளித்ததால், அவரை கடுமையான சோதனைக்கு உள்ளாக்கி கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணையில், பாதுகாப்பு பணியாளர்களிடம் ஒத்துழையாதது, தவறான நடத்தை காரணமாக 1 மாத சிறை தண்டனையும், தொடர்ந்து நாடு கடத்தவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.