15.9 C
Munich
Sunday, September 8, 2024

ஹஜ் தொடர்பான மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 19 பேரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Must read

Last Updated on: 1st July 2022, 07:36 pm

ஹஜ் தொடர்பான மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இரண்டு சவுதி அரேபியர்கள் மற்றும் 17 வெளிநாட்டவர்கள் உட்பட 19 பேரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மற்றவர்களின் சார்பாக ஹஜ் செய்வதாக உறுதியளித்து விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் யாத்ரீகர்களை ஏமாற்றுவது

அடாஹி (பலியிடப்பட்ட விலங்குகளைப் பயன்படுத்துவதற்கான சவூதி திட்டம்) கூப்பனை வழங்குதல் மற்றும் போலி நிறுவனங்கள் மூலம் போக்குவரத்தை வழங்குதல் உள்ளிட்ட மோசடிகள் பெயரில் இரண்டு சவுதி அரேபியர்கள் மற்றும் 17 வெளிநாட்டவர்கள் உட்பட 19 பேரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மோசடி செய்தவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் ஜெனரல் சமி அல்-ஷுவைரெக் கூறினார். என பொது பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் பிரிஜி கூறினார். மேலும் அவர்கள் பப்ளிக் பிராசிகியூஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு சவூதியர்கள், ஆறு குடியிருப்பாளர்கள், எல்லைப் பாதுகாப்புச் சட்டத்தை மீறியவர்கள் மூன்று பேர், ரெசிடென்சி பெர்மிட் (இகாமா) சட்டத்தை மீறிய யேமன் நாட்டை சார்ந்த நான்கு பேர், பாகிஸ்தானியர்கள் மூன்று பேர் மற்றும் மியான்மர் நாட்டவர் ஒருவரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article