சவூதி: கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சார்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

சவுதி அரேபியாவில் நடந்த கார் விபத்தில் 5 இந்தியர்கள் உயிரிழந்தனர். மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். திங்கட்கிழமையன்று ஜித்தாவின் குலைஸ் என்ற இடத்தில் இந்த பயங்கர விபத்து நடந்தது.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த குடும்பத்தினர் பயணித்த வாகனத்தில் விபத்து ஏற்பட்டது. துவாலில் உள்ள உறவினர்களுடன் பண்டிகையை கொண்டாட குடும்பத்தினர் சென்றிருந்தனர். திரும்பி வந்து கொண்டிருந்த போது குலைஸ் என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டது.

ஜித்தா இந்தியன் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் அயன் முஹம்மது நியாஸ், 9ம் வகுப்பு படிக்கும் இக்ரா நியாஸ், 2ம் வகுப்பு படிக்கும் அனஸ் மற்றும் அவர்களது உறவினர்கள் இனாயத் அலி, தௌபிக் கான் ஆகியோர் உயிரிழந்தனர். இறந்த மூன்று குழந்தைகளும் உடன்பிறந்தவர்கள். சட்ட நடைமுறைகள் முடிந்து அனைவரது உடல்களும் புதன்கிழமை சவுதி அரேபியாவில் அடக்கம் செய்யப்படும் என்று உறவினர்கள் தெரிவித்தனர்

மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள
எங்கள் WhatsApp Groupல் (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) இணைத்து கொள்வதோடு, எங்கள் சமூக வலைதள பக்கங்களிலும் இணைந்து கொள்ளுங்கள்.. :)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times