சவுதிஅரேபியாவில் ரமலானில் சாலை விபத்துக்கள் அதிகரித்திருப்பதாகவும், இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் பொது போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
நோன்பு திறப்பதற்கு முன்பாக விபத்துக்களில் இறப்பவர்களின் எண்ணிக்கை 27 சதவிகிதமும், பஜ்ர் தொழுகைக்கு முன்பாக 10 சதவிகிதமும் அதிகரித்திருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.வாகனம் ஓட்டும் போது, சாலை விதிகளை மிகுந்த எச்சரிக்கையுடன் முழுமையாக பின்பற்றுமாறு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. நோன்பு வைத்துக் கொண்டு வாகனங்கள் ஓட்டும் போது மிகவும் எச்சரிக்கையாகவும், நீண்ட தூர பயணங்களை திட்டமிடல்களுடன் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.#saudi #saudiarabia #sauditamilnews