மக்கா போலீசார் சவுதி அரேபியாவை சார்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்
முஸ்லீம் அல்லாதவருக்கு மக்காவிற்குள் செல்வர்தற்கு உதவிய சவூதி குடிமகன் ஒருவரை அந்நாட்டின் மக்கா காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. சவுதி அரசின் விதிகளின்படி, முஸ்லிம்கள் அல்லாதோர் புனித மக்கா அல்லது மதீனாவிற்குள் நுழைய அனுமதி இல்லை.
இதுகுறித்து மக்கா காவல்துறை அதிகாரி கூறுகையில், சவுதி நாட்டவர் ஒருவர் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவரை முஸ்லிகளுக்கான பிரத்யேக பாதையில் மக்காவிற்குள் அழைத்து வந்தார், சவுதி அரேபியாவின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக நடவடிக்கை எடுக்கும் விதமாக மக்கா காவல்துறை அதிகாரிகளால் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அனுமதி இல்லாமல் நுழைந்த மற்றும் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக அமெரிக்க பத்திரிகையாளரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சவூதி அரேபியாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அந்நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும் எனவும், இதுபோன்ற புனித தளங்களில் விதிமுறைகளை மீறுவோர் மீது சவுதி அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுக்கும் எனவும், கடுமையான அபராதமும் விதிக்கப்படும் எனவும் சவுதி அரசாங்கம் எச்சரித்துள்ளது.
முன்னதாக 2017ஆம் ஆண்டில் இஸ்ரேலை சார்ந்த ஒரு யூதர் சட்டவிரோதமாக மதினாவில் இருக்கும் மஸ்ஜித் நபவிக்கு சென்றது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்கள் Gulftube tamil news / WhatsApp Groupல் (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) இணைத்து கொள்ளுங்கள்.