சவுதி அரேபிய அரசு 2024 ஆம் ஆண்டு ஹஜ் கடமையை ஒட்டி உம்றா விசா வழங்குவதை நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் ஹஜ் வெற்றிகரமாக முடிந்து விட்டதை அடுத்து, புதிய உம்றா விசா வழங்குவதை இன்று முதல் துவங்கியுள்ளது.முந்தைய ஆண்டுகளில் முஹர்ரம் மாதம் உம்றா விசா வழங்குவது நடைமுறையாக இருந்தது.
இந்த வருடம் ஹஜ் முடிந்த உடன் வழங்கப்படுகிறது. உம்றா விசாவில் வருபவர்கள் சவுதி அரேபியாவில் 90 நாட்கள் தங்கி இருக்கலாம் என்பதும், சவுதியின் எந்த பகுதிக்கும் செல்லலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.