UAE: சென்னையை சார்ந்த மாணவனுக்கு துபாயில் உயரிய விருது..

சென்னையைச் சேர்ந்த 10 வயதான ஷியாம் மணிகண்டன் துபாயில் வசித்து வருகிறார். ஷார்ஜாவில் உள்ள டெல்லி தனியார் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவரான இவர் மனிதாபிமான, மற்றும் சுற்றுச்சூழல் பணிகளுக்கான உயரிய விருதான டயானா விருதை இந்த ஆண்டு (2022) பெற்றுள்ளார். மறைந்த வேல்ஸ் இளவரசி டயானாவின் நினைவாக வழங்கப்படும் இந்த விருது, அதே பெயரில் உள்ள தொண்டு நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகிறது. அவரது மகன்களான இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரி ஆகியோரின் மேற்பார்வையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

ஷியாம் தனது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆவணப்படங்களிலிருந்து சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மற்றும் இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை முறை பற்றி கற்று வந்துள்ளார். தனது சகோதரி குப்பைகளை மறுசுழற்சி செய்வதைப் பார்த்தபோது அவருக்கும் அதில் ஆர்வம் கொண்டு. அவர் பள்ளி
நிகழ்ச்சிகள், ‘ஆஸ்டர் வாலண்டியர்ஸ்’ மற்றும் ‘இஇஜி’ மூலம் பொருட்களை மறுசுழற்சி செய்தார். சுற்றுப்புற பிரச்சாரங்களின் போது, அவர் தனது மறுசுழற்சி இயக்கத்தை ஆதரிக்க மக்களைக் கோரும் வகையில் கையால் செய்யப்பட்ட துண்டுப் பிரசுரங்களை வழங்கியும், கடலுக்குள் பிளாஸ்டிக் எவ்வாறு நுழைந்து, நமது
சுற்றுச்சூழலில் பரவி பூமியில் உள்ள உயிர்களை எவ்வாறு அது பாதிக்கிறது என்பது குறித்தும் விளக்கினார்.

வேற்றுமையில் ஒற்றுமையை ஊக்குவிக்கும் வகையில் 14 இந்திய மொழிகளில் ‘மிலே சுர் மேரா தும்ஹாரா’ என்ற தேசபக்திப் பாடலை இளவயதிலேயே பாடியதற்காக இந்தியா புக் ஆப் ரிக்கார்டு புத்தகத்திலும் ஷியாம் இடம்பெற்று உள்ளார். இதற்காகத் தன்னை ஊக்குவித்த தனது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்வதாக மாணவர் ஷியாம் தெரிவித்தார்.

மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள
எங்கள் WhatsApp Groupல் (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) இணைத்து கொள்வதோடு, எங்கள் சமூக வலைதள பக்கங்களையும் follow செய்து கொள்ளுங்கள்.. 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times