துபாயில் முன்னதாகவே திறக்கப்படும் பள்ளிகள்:தேதிகளை வெளியிட்ட ஆணையம்

துபாயின் அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (Knowledge and Human Development Authority-KHDA) பள்ளிகளின் 2023-24 கல்வியாண்டுக்கான முக்கியமான தேதிகள் மற்றும் புதிய பள்ளி ஆண்டு எப்போது தொடங்குகிறது என்பது உள்ளிட்ட தகவல்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

KHDA இன் அறிவிப்பின்படி, துபாயின் தனியார் பள்ளிகள் எதிர்வரும் ஆகஸ்ட் 28 அன்று புதிய கல்வியாண்டிற்காக மீண்டும் திறக்கப்படும். வழக்கமாக பள்ளி கல்வியாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கும், ஆனால் இப்போது முன்னதாகத் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்காக, அவர்களின் குடும்பங்கள் கோடை விடுமுறையை முடித்து விட்டு, வரவிருக்கும் கல்வி செமஸ்டருக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

KHDA அறிவித்த முக்கிய தேதிகள்:

  • ஆகஸ்ட் 28- கல்வியாண்டு ஆரம்பம்
  • டிசம்பர் 11- குளிர்கால விடுமுறை (Winter break)
  • ஜனவரி 2- குளிர்கால விடுமுறை முடிந்து வகுப்புகள் மீண்டும் தொடங்கும் நாள்
  • மார்ச் 25- வசந்தகால விடுமுறை (Spring break)
  • ஏப்ரல் 15- வசந்தகால விடுமுறை முடிந்து வகுப்புகள் மீண்டும் தொடங்கும் நாள்

KHDA மேற்கூறப்பட்டுள்ள முக்கிய தேதிகளை அமல்படுத்தும் அதே வேளையில், பள்ளிகளுக்கு அவர்களின் விடுமுறை காலங்களை நிறுவுவதில் நெகிழ்வுத்தன்மை கொடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times