DSS 25 மணிநேர விற்பனையில் ஷேர் மில்லியனர் ஆகம் வாய்ப்பு ஒரு அதிர்ஷ்டசாலிக்கு..
துபாயில் ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தின் போது துபாய் சம்மர் சர்ப்ரைசஸ் (DSS) என்ற நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் கோடைகாலம் ஆரம்பித்ததையொட்டி, ஜூலை 1ஆம் தேதியான இன்று முதல் DSS-2022 ஆரம்பித்துள்ளது
இந்த துபாய் சம்மர் சர்ப்ரைஸானது, மால்கள் மற்றும் பொழுதுபோக்கு தளங்களில் விற்பனை பொருட்களுக்கு தள்ளுபடி, ப்ரமோஷன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடக்க உள்ளன. இந்த ஷாப்பிங் கொண்டாட்டத்தின் 25வது வெள்ளி ஆண்டு செப்டம்பர் 4 வரை நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் DSS-ன் 25 வது பதிப்பை முன்னிட்டு 24 மணி நேர விற்பனையுடன் 90% வரை தள்ளுபடிகள் மற்றும் ஒரு மில்லியன் திர்ஹம்ஸுக்காக ரேஃபிள் டிரா போன்ற பல போட்டிகாள் நடத்தப்பட உள்ளன. முதல் வாரத்தில், துபாய் திருவிழாக்கள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனமான Majid Al Futtaim உடன் இணைந்து 90% வரை தள்ளுபடி வழங்கும் முக்கிய
சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பிராண்டுகளைக் காண சிறப்பு 24 மணிநேர விற்பனையை நடத்தும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் முதல் வாரத்தில், பொருட்களை வாங்குபவர்கள் 1000 பிராண்டுகள் மற்றும் 5000
சில்லறை விற்பனை நிலையங்களில் 25 முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடியைப்
பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் துபாய் மாலில் 500 திர்ஹம்ஸ் அல்லது அதற்கு மேல்
பர்சேஷ் செய்யும் நபர்கள் ஒரு மில்லியன் திர்ஹம்ஸ் என்ற மெகா பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள். அது மட்டுமின்றி ஷாப்பிங் செய்பவர்கள் DSS நடத்தப்படும் எட்டு வாரக் குலுக்கல்களில் 25,000 திர்ஹம்ஸ் மதிப்புள்ள Emaar கிஃப்ட் கார்டுகளை வெல்லலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.