UAE: அபுதாபியில் இனி வெள்ளிக்கிழமை அன்று இலவச பார்க்கிங் வசதி கிடையாது! கட்டணம் செலுத்த உத்தரவு..

அபுதாபியில் வெள்ளிக்கிழமைகளில்
இலவசமாக அளிக்கப்பட்டு வந்த
பொது பார்க்கிங் இன்று
முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இ
லவசமாக வழங்கப்படும் என்று
போக்குவரத்துத் துறை ஆணையம்
அறிவித்துள்ளது. வார விடுமுறை
நாட்களில் Peak Hours நேரங்களில்
போக்குவரத்து நெரிசலை
குறைக்கவும், மக்கள்
நடமாட்டத்தை எளிதாக்கவும்,
அமீரக சாலைகளில் பாதுகாப்பை
அதிகரிக்கவும் இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளது என்று
கூறப்பட்டுள்ளது.

அபுதாபியில் முன்னதாக வாகன
நிறுத்தத்தை ஒழுங்குபடுத்தும் 2009 ஆம் ஆண்டுக்கான சட்ட எண் 18
இன் கிழ் நிர்வாக விதிமுறைகளின் திருத்தம் மற்றும் அபுதாபி போக்குவரத்து கட்டணங்கள் தொடர்பான 2017 ஆம் ஆண்டிற்கான சட்ட எண் 17 இன் கிழ் நிர்வாக விதிமுறைகளின் திருத்தம் குறித்தும் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, புதிய முடிவை அமல்படுத்தும் வகையில், அபுதாபி உள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம், நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையுடன் இணைந்து, பொது வாகன நிறுத்துமிடங்களில் பார்க்கிங் கட்டணம் மற்றும் தர்ப் டோல் அமைப்புக்கான கட்டணத்தை பரிசீலிப்பதற்கான தேதியில் திருத்தம் செய்வதாக அறிவித்தது. மேலும் அமீரக போக்குவரத்து கட்டணங்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இருக்கும் என்றும் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் இலவசமாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள
எங்கள் WhatsApp Groupல் (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) இணைத்து கொள்வதோடு, எங்கள் சமூக வலைதள பக்கங்களையும் follow செய்து கொள்ளுங்கள்.. 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times