பாகிஸ்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்பிலான அவசர நிவாரணம் உதவிகளை வழங்குமாறு, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும் மற்றும் துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உதவிகள் அனைத்தும் முகமது பின் ரஷித் அல் மக்தூம் குளோபல் முன் முயற்சிகள், உணவுத் திட்டம் மற்றும் முகமது பின் ரஷித் அல் மக்தூம் மனிதாபிமானம் மற்றும் தொண்டு நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நேரடியாக உதவிகள் வழங்கப்படும்.
ஐக்கிய அரபு அமீரகம் மனிதாபிமான முயற்சிகள், இயற்கை பேரிடர் மற்றும் நெருக்கடி காலகட்டத்தில் தேவையான உதவிகளை வழங்கி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
“கடந்த வாரம், 30 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு 4 மடங்கு பாகிஸ்தானில் மழை பொழிந்துள்ளது. இந்த மழையால், 1,136 பேர் பலியாகி உள்ளனர் மற்றும் லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர், பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.”
தொடர்ந்து இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp குரூப்பில் (https://bit.ly/3SWGrZk) இணைத்து கொள்ளுங்கள்.