14.8 C
Munich
Sunday, September 8, 2024

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஷேக் மன்சூர். யார் இவர்..?

Must read

Last Updated on: 30th March 2023, 08:37 pm

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஏழு எமிரேட்களின் ஆட்சியாளர்களைக் கொண்ட நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரமான ஐக்கிய அரபு அமீரக ஃபெடரல் சுப்ரீம் கவுன்சிலின் ஒப்புதலுடன், அமீரக நாட்டின் புதிய துணை ஜனாதிபதி நியமனத்தை அறிவிக்கும் எமிரி ஆணையை, அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

அமீரக அதிபர் வெளியிட்ட புதிய நியமன ஆணையின்படி, அமீரகத்தின் துணைப் பிரதமராகவும், ஜனாதிபதி விவகார நீதிமன்ற அமைச்சராகவும் இருந்து வந்த ஷேக் மன்சூர் பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் அமீரகத்தின் புதிய துணை ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் தற்போது துணை ஜனாதிபதியாக இருப்பவரும், பிரதமரும் மற்றும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களுடன் இணைந்து ஷேக் மன்சூரும் துணை ஜனாதிபதியாக தொடர்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 21, 1970 அன்று அபுதாபியில், மறைந்த ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் மூத்த மகனாக பிறந்த ஷேக் மன்சூர், 1997 ஆம் ஆண்டில் அவரது மறைந்த தந்தை ஷேக் சையத் அவர்கள் அலுவலகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2000 ம் ஆண்டில், தேசிய ஆவணக் காப்பகத்தின் தலைவராகவும், அதன் பிறகு நவம்பர் 2004 இல் ஜனாதிபதி விவகார அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து 2005ல் அபுதாபி மேம்பாட்டு நிதி மற்றும் அபுதாபி உணவுக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைவராகவும், 2006 ஆம் ஆண்டில், அபுதாபி நீதித்துறை மற்றும் 2007 இல் எமிரேட்ஸ் முதலீட்டு ஆணையத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார். பின்னர் 2009 இல், புதிய அமைச்சரவையின் உருவாக்கத்துடன், ஷேக் மன்சூர் பின் சையத் அவர்கள் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டு தற்போது வரை அந்த பதவியில் இருந்து வருகிறார்.

மேலும் ஜூலை 2022 ம் ஆண்டில், ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட கூட்டாட்சி ஆணையைத் தொடர்ந்து ஷேக் மன்சூர் ஜனாதிபதி நீதிமன்றத்தின் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். அபுதாபியில் பிறந்து உயர்நிலைப் பள்ளி படிப்பை வரை அமீரககத்திலேயே பயின்று, தனது உயர்கல்வியை அமெரிக்காவில் முடித்த ஷேக் மன்சூர், 1993 ம் வருடம் சர்வதேச உறவுகள் பாடத்தில் இளங்கலைப் பட்டமும் (Bachelor’s degree in International Relations) பெற்றுள்ளார்.

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article