அபுதாபி: தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) வருகின்ற ஜூலை 9 சனிக்கிழமையன்று கொண்டாட இருக்கும் ஈத் அல் அதாவிற்கான COVID-19 பாதுகாப்பு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.
பாதுகாப்பான ஈத் வழிகாட்டுதல்களை NCEMA சிறப்பு ஊடக சந்திப்பின் போது ஆணையத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் Dr. தாஹிர் அல் அமெரி திங்களன்று அறிவித்தார்.
“அமீரகத்தில் கோவிட்-19 தொற்றுநோயைச் சமாளிப்பதற்கான அதன் செயல்திறன் நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் நிலையில், அத்துடன் சமீபத்தில் அதிகரித்திருக்கும் நோய்த்தொற்றுகளின் நிலைமையைச் சரிசெய்யும் விதமாக இந்த நடவடிக்கையானது தயார்நிலையை உறுதிப்படுத்துவதாக” இருக்கின்றது என்று டாக்டர் அல் அமெரி கூறினார்.
ஈத் நாளில் விடியற்காலை தொழுகைக்குப் பிறகு மசூதிகள் மற்றும் பிரார்த்தனை கூடங்கள் திறக்கப்படும். ஈத் தொழுகை மற்றும் நிகழ்வுகள் 20 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும், அதே நேரத்தில் மசூதிகளைச் சுற்றியுள்ள வெளிப்புற இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றக்கூறி ஸ்டிக்கர்களும் ஒட்டப்படும் என்றும் அவர் கூறினார்.
மக்கள் கூடுவது, கைகுலுக்கல் மற்றும் உடல் ரீதியான வாழ்த்துக்களை தவிர்க்கவும், வாய்மொழி வாழ்த்துக்களை தேர்வு செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்
மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள
எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.