அபுதாபியில் கட்டுமானத்தில் இருந்த ஒரு கட்டிடத்தின் ஒருபகுதி சரிந்து விழுந்தது.
வியாழக்கிழமை அல் பேட்டீன் பகுதியில் கட்டுமானத்தின் கீழ் இருந்த ஒரு மசூதியின் ஒரு பகுதி சரிந்து விழுந்த இடத்தை அதிகாரிகள் வெற்றிகரமாக வெளியேற்றி பாதுகாத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து அபுதாபி போலீசார் மற்றும் அபுதாபி சிவில் பாதுகாப்பு ஆணையக் குழுக்கள் உடனடியாக பதிலளித்தன. அதிகாரப்பூர்வ ட்வீட் படி, லேசான சிறிய காயங்களுடன் ஊழியர்கள் உயிர் தப்பித்தனர். மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் பொதுமக்கள் யாரும் தளத்தை நேரில் சென்று அணுக வேண்டாம் என்றும் அவர்களின் தகவல்களை உத்தியோகபூர்வ மூலங்களிலிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ளும் படி கேட்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp குரூப்பில் (https://bit.ly/3SWGrZk) இணைத்து கொள்ளுங்கள்.