குலுங்கிய கட்டிடங்கள்..ஜப்பானில் 6.2 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

டோக்கியோ: வடக்கு ஜப்பானில் இப்போது சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.

தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அமைந்துள்ள குட்டி நாடு ஜப்பான். தீவு நாடான ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான்.

நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் ரிங் ஆப் பயர் என்ற பகுதியில் ஜப்பான் இடம் பெற்றுள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று தான்.

அங்கே சிறு நில அதிர்வுகள் தொடங்கி மிக பெரிய நிலநடுக்கம் கூட அடிக்கடி ஏற்படும். இதனால் அங்குப் பள்ளிகளிலேயே நிலநடுக்கம் ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுப்பார்கள்.

அந்தளவுக்கு அங்கே நிலநடுக்க பாதிப்பு மோசமாக இருக்கும். மேலும், அங்குக் கட்டப்படும் கட்டிடங்களும் கூட நிலநடுக்கங்களைத் தாங்கும் வகையிலேயே கட்டப்பட்டிருக்கும்.

இதற்கிடையே இப்போது அங்கு மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு ஜப்பான் பகுதியில் அமைந்துள்ள ஹொக்கைடோ தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நேரப்படி மாலை 6.18 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், வடகிழக்கு ஜப்பான் முழுவதும் நான்கு உணரப்பட்டது.

இதனால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும், இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

“ரிங் ஆஃப் ஃபயர்” பகுதியின் மீது அமைந்துள்ளதே இப்படி அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக் காரணமாகும்.

இந்தப் பகுதியில் அடியில் உள்ள டெக்டோனிக் தட்டுகள் அடிக்கடி மோதும்.. இதன் காரணமாகவே அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. நல்வாய்ப்பாக இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பெரியளவில் சேதங்கள் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times