சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் – ஹவுரா, சரக்கு ரயிலுடன் மோதல்:இந்நேர நிலவரப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280 ஆக உயர்வு!900 பயணிகள் படுகாயம்; ஒடிசாவில் பயங்கரம்; 17 பெட்டிகள் தடம் புரண்டன; தமிழ்நாடு அரசு குழு விரைந்தது.

பாலசோர் :ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், ஷாலிமார் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 233 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்தெரிவிக்கிறது.

ஏராளமானோர் இடிபாடு களில் சிக்கி இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. அவசரகால பணிகளில் நுாற்றுக்கணக்கான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க தமிழக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஒடிசா விரைகின்றனர்.

கர்நாடகாவின் பெங்களூரில் இருந்து, மேற்கு வங்கத்தின் ஹவுரா நோக்கி ரயில் எண் 12864 என்ற பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது.அப்போது, ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே சென்ற போது, மாலை 7:00 மணிக்கு பெங்களூரு – ஹவுரா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. அந்த ரயிலின் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தின் மீது கவிழ்ந்தன.அப்போது, மேற்கு வங்கத்தின் கோல்கட்டா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி, எதிர்புறத்தில் இருந்து ரயில் எண் 12841 என்ற ஷாலிமார் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது.

இந்த ரயில், தடம்புரண்டு கிடந்த பெங்களூரு – ஹவுரா ரயில் மீது பயங்கரமாக மோதியதில் இதன் பெட்டிகளும் கவிழ்ந்தன.மோதிய வேகத்தில், கோரமண்டல் எக்ஸ்பிரசின் பெட்டிகள், அடுத்த தடத்தில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. மூன்று ரயில்களும் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதி கவிழ்ந்தன.சில நிமிடங்களில் அந்த பகுதி முழுதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. எந்த பக்கம் திரும்பினாலும், அழு குரல்களும், உதவி கோரும் பயணியரின் கதறலும் காண்போர் மனதை நொறுக்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times