10 C
Munich
Friday, October 18, 2024

உலகின் விலை உயர்ந்த மற்றும் மலிவான நகரங்கள்.. லிஸ்டில் 2 இந்திய சிட்டிக்கள்.. சென்னைக்கு எந்த இடம் பாருங்க

உலகின் விலை உயர்ந்த மற்றும் மலிவான நகரங்கள்.. லிஸ்டில் 2 இந்திய சிட்டிக்கள்.. சென்னைக்கு எந்த இடம் பாருங்க

Last Updated on: 1st December 2023, 08:43 pm

இந்தாண்டு எந்த நகரங்கள் அதிக செலவு வைக்கிறது.. எந்த நகரங்களில் வாழ்ந்தால் குறைந்த செலவு மட்டுமே ஆகிறது என்பது குறித்த விரிவான தகவலை எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் வெளியிட்டுள்ளது. பொதுவாக விலையுயர்ந்த நகரங்கள் லிஸ்டில் நாம் அமெரிக்க நகரங்கள் டாப் இடத்தில் வரும் என நினைப்போம்.. ஆனால், உண்மையில் இரண்டையும் ஓவர்டேக் செய்து சிங்கப்பூர் மற்றும் சூரிச் நகரங்கள் உலகின் மிக விலையுயர்ந்த நகரங்கள் லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளது.ஜெனிவா மூன்றாவது இடத்தில் இருக்கும் நிலையில், அமெரிக்காவின் நியூயார்க், ஹாங்காங் ஆகிய நகரங்கள் 4, 5ஆவது இடங்களில் உள்ளன.

லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா), பாரீஸ் (பிரான்ஸ்), கோபன்ஹேகன் (டென்மார்க்), டெல் அவிவ் (இஸ்ரேல்), சான் பிரான்சிஸ்கோ (அமெரிக்கா) ஆகிய நகரங்கள் 6 முதல் 10 வரையிலான இடங்களில் உள்ளன.

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் அனைத்து நாடுகளும் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில், அதில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீளவில்லை என்று எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் அமைப்பு எச்சரித்துள்ளது.

ஒரே ஆண்டில் பொதுமக்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் பொருட்களின் விலை சராசரியாக 7.4% அதிகரித்துள்ளதாக எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் தெரிவித்துள்ளது. இது கடந்தாண்டு அதிகரித்த 8.1% விடக் குறைவு தான் என்ற போதிலும், 2017-2021 காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது கணிசமாக அதிகம் தான்.

ஆசிய நாடுகள்: மேற்குலக நாடுகளுடன் ஒப்பிடும் போது ஆசிய நகரங்களில் வாழ்வதில் குறைவாகவே செலவாவதாக அதில் கூறப்பட்டுள்ளது. கடந்தாண்டு உடன் ஒப்பிடும் போது ஜப்பானில் உள்ள ஒசாகா மற்றும் டோக்கியோ நகரங்களில் ஆகும் செலவு குறைந்துள்ளது. அதேபோல சீன நான்கு முக்கிய நகரங்களான நான்ஜிங், வ்ஸ்ய், டேலியந், பெய்ஜிங் ஆகிய நகரங்களிலும் கடந்தாண்டு உடன் ஒப்பிடும் போது செலவு குறைந்துள்ளது.

இந்திய நகரங்கள்: மேலும், இந்த சர்வேப்படி சிரியாவின் டமாஸ்கஸ் இந்த ஆண்டு வாழ்வதற்கு மலிவான நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. ஈரானின் தெஹ்ரான் 2வது இடத்தில் இருக்கும் நிலையில், லிபியாவின் திரிபோலி 3இவது இடத்திலும் இருக்கிறது.

இந்த லிஸ்டில் பாகிஸ்தானின் கராச்சி, உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் மற்றும் துனிசியாவின் துனிஸ், ஜாம்பியாவின் லூசாகா ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறது. இந்த மலிவான நகரங்கள் லிஸ்டில் அகமதாபாத் மற்றும் சென்னை ஆகியவை முறையே 8வது மற்றும் 10வது இடங்களைப் பிடித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version