பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க்ஜுக்கர்பெர்க் அவ்வப்போது சமூக வலைதளத்தில் பயனர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.
அப்போது ஒரு பயனர் மார்க்ஜூக்கர்பெர்க்கிடம் நீங்கள் முதல் பேஸ்புக் கணக்கை உருவாக்க பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரி எது என்று கேட்டார். அதற்கு மார்க்ஜூக்கர்பெர்க் அளித்த பதிலில், 2004-ம் ஆண்டில் பேஸ்புக்கில் முதல் கணக்கை பதிவு செய்ய ‘mzuckerb@fas.harvard.edu’ என்ற மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தியதாக கூறினார்.
மார்க்ஜுக்கர்பெர்க் பேஸ்புக் தளத்தில் முதலில் வந்தவர். ஆனால் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கிய முதல் நபர் அல்ல. அவருக்கு முன்பே 3 ஐ.டி.கள் உருவாக்கப்பட்டன. அவை அனைத்தும் சோதனைக்காக ஒதுக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டன.இதன்படி பேஸ்புக்கில் 4-வது பழமையான கணக்காக ஜுக்கர்பெர்க்கின் கணக்கு உள்ளது. 5-வது மற்றும் 6-வது கணக்குகள் ஜுக்கர்பெர்க்குடன் இணைந்து பேஸ்புக்கை தொடங்கிய இணை நிறுவனர்களுடையது ஆகும்.