இலங்கை முழுவதும் மூடப்பட்ட McDonald’s கடைகள்: வெளியாகியுள்ள காரணம்

சுத்தமின்மை குறித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை முழுவதும் உள்ள McDonald’s கடைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூர் உரிமையாளருக்கு எதிராக

இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க துரித உணவு நிறுவனமான McDonald’s தமது உள்ளூர் உரிமையாளருக்கு எதிராக சட்டப் போராட்டத்தை ஆரம்பித்ததை அடுத்தே கடைகள் மூடப்பட்டுள்ளன.

ஏப்ரல் 4 ஆம் திகதி வரை McDonald’s கடைகளை மூடுவதற்கு கொழும்பு வணிக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளூர் உரிமையை வைத்திருப்பவர்கள் சர்வதேச சுகாதாரத் தரங்களைச் சந்திக்கத் தவறியதாக McDonald’s தலைமை நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

Abans நிறுவனம் 12 கடைகள்

விசாரணை முன்னெடுக்கும் நிலையில் கடைகள் மூடப்படுகிறது என்றே நீதிமன்ற அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இதனிடையே, உள்ளூர் நிறுவனமான Abans உடனான உரிமை ஒப்பந்தத்தை கடந்த வாரம் முறித்துக் கொண்டதாக McDonald’s நிறுவனம் சார்பான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

1998ல் இலங்கையில் McDonald’s நிறுவனம் நுழைந்த பின்னர் உரிமம் பெற்றுள்ள Abans நிறுவனம் 12 கடைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், இலங்கை முழுவதிலும் McDonald’s கடைகள் மூடப்பட்டுள்ளதாக பதாகை பதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற தகவல் குறிப்பிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times