சவுதி அரேபியாவில் வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், மருந்து நிலையங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்கிற சட்டம் நடைமுறைக்கு வந்தது.
இந்த சட்டத்தை மீறி, பாதுகாப்பு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத நிறுவனங்களுக்கு, கேமரா ஒன்றிற்கு ஆயிரம் ரியால்கள் என்கிற அடிப்படையில் அபராதம் விதிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை அழிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.