11.6 C
Munich
Friday, September 20, 2024

உஷார்.. அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் SMS மற்றும் Linkகை கிளிக் செய்ய வேண்டாமென காவல்துறை எச்சரித்துள்ளது.

உஷார்.. அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் SMS மற்றும் Linkகை கிளிக் செய்ய வேண்டாமென காவல்துறை எச்சரித்துள்ளது.

Last Updated on: 2nd July 2022, 09:01 pm

இது தொடர்பாக காவல்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்

ஊரப்பாக்கத்தை சேர்ந்த திரு.சுதாகர் என்பவர் தனது Central Bank of India வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 1,52,200/- (ஒரு இலட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து இருநூறு)-ம் மோசடியாக எடுக்கப்பட்டு விட்டதாகவும் அந்த பணத்தை மீட்டு தருமாறு செங்கல்பட்டு மாவட்ட Cyber Crime காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார், பின்பு 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக வங்கி கணக்கு முடக்கப்பட்டது. 

மேலும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சுகுணாசிங் இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட Cyber Crime கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.V.பொன்ராமு அவர்களின் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் திரு. R.சிவக்குமார், காவல் உதவி ஆய்வாளர் திரு. B.தனசேகரன் மற்றும் காவலர்கள் அடங்கிய செங்கல்பட்டு மாவட்ட Cyber Crime காவல் துறையினரால் தொடர் விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட நபரின் வங்கி கணக்கிற்கு பணம் ரூபாய் 1,52,200/- (ஒரு இலட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து இருநூறு)-ம் வரவு வைக்கப்பட்டது.

பொதுமக்கள் Cyber Crime குற்றவாளிகளிடம் சிக்காமல் இருக்க விழிப்புடன் இருக்கவேண்டும். மேலும் எந்தவொரு நபருக்கும் பணம் அனுப்பும் முன்பு அவரது உண்மைதன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் SMS E-mail மற்றும் Website -களில் வரும் Link -களில் சென்று Cell No, Bank Account No, OTP, Debit/Credit Card/CW போன்ற எந்த தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவேண்டாம். Cyber Crime பற்றிய புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற வளைதளத்தில் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம்.

சைபர் குற்றவாளிகள் மூலம் ஏற்பட்ட நிதியிழப்புகளுக்கு 1930 என்ற எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளவும். என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version