கார் ஷோரூமில் எமிராட்டி சமூகத்தை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்ட நபர் அதிரடி கைது!! – நீங்க பாத்திங்களா அந்த வீடியோவ..!!.

ஐக்கிய அரபு அமீரகத்தில் எமிராட்டி சமூகத்திற்கு அவதூறு பரப்பும் வகையில் வீடியோவைப் படம்பிடித்து, அதனை இணையத்தில் வெளியிட்டு சமூக ஊடகத்தை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிய வெளிநாட்டவர் ஒருவரை அமீரக காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கார் ஷோரும் ஒன்றுக்கு சென்று கார் வாங்குவது போல் வெளியான அந்த வீடியோ நேற்றும் இன்றும் அமீரகம் முழுவதும் வைரலானது. அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அந்த நபரை விசாரணை நிலுவையில் வைக்குமாறு சைபர் கிரைம்களை எதிர்த்துப் போராடும் பெடரல் ப்ராசிகியூஷன் உத்தரவிட்டுள்ளது.

UAE அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தில் உள்ள ஃபெடரல் ப்யூரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்ஸ் (Federal Bureau of Investigations) சமூக ஊடக தளங்களில் உள்ள வீடியோ கிளிப்பை ஆய்வு செய்த பின்னர், அமீரகத்தின் ஊடக உள்ளடக்க தரநிலைகளுக்கு முரணான மற்றும் எமிராட்டி சமூகத்தை அவமதிக்கும் உள்ளடக்கத்தை வெளியிட்டதாக ஆசிய வெளிநாட்டவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட அபாண்டமான அந்த வீடியோ கிளிப்பில், கைது செய்யப்பட்டவர் எமிராட்டி உடை அணிந்து, சொகுசு கார் ஷோரூமுக்குள் செல்கிறார். அவரைப் பின்தொடர்ந்து இரண்டு பேர் பெரிய தொகையை ஒன்று சேர்ந்து தூக்கிச் செல்கின்றனர்.

உள்ளே நுழைந்த நபர் அங்கு பணிபுரியும் ஊழியரிடம் காஃபி குடிங்கள் என்று கூறி ஒரு பணக் கட்டை தூக்கி வீசுகிறார். பின்னர், ஷோரூம் உரிமையாளரிடம் காரின் விலையை கேட்கும் போது 2.2 மில்லியன் திர்ஹம்கள் என்கிறார். அதற்கு அவர் அதை விட அதிக விலையுள்ள காரை வாங்க போவதாக தனது ஆணவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்த வீடியோ கிளிப்பில், ஷோரூம் ஊழியர்களுக்கு பணத்திற்கு எந்த மதிப்பையும் காட்டாத விதத்திலும், எமிராட்டி குடிமக்களை கேலி செய்யும் வகையில் அவதூறாக விளம்பரப்படுத்தும் விதத்திலும் அவர் பெரிய தொகையை தூக்கி வீசுவதாகவும் காட்டப்பட்டிருக்கிறது. இது பொதுமக்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ டிக்டாக், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடக பக்கங்களில் வைரலானதை தொடர்ந்து அந்த வீடியோவை வெளியிட்ட நபரை அமீரக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அத்துடன், இந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட அந்த கார் ஷோரூமின் உரிமையாளருக்கும் பப்ளிக் பிராசிகியூஷன் சம்மன் அனுப்பியுள்ளது.

ஆகவே, அமீரகத்தில் உள்ள சமூக ஊடகப் பயனர்கள் வீடியோக்களை பதிவிடுவதற்கு முன்னர், சைபர் கிரைம் விதிமுறைகளைப் பின்பற்றுமாறும், நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளின் மதிப்புகளைக் கருத்தில் கொள்ளுமாறும் காவல்துறையினர் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளனர்.

அமீரகத்தில் பிரபலமான இந்த நபரோட வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று எதிர்பாராத விதமா நம் கண்ணிலும் தென்பட்டது. அதுமாதிரி உங்களில் யாராவது இந்த வீடியோவைப் பார்த்தீங்களா.? ஒருவேளை பார்த்தால் ஷேர் மட்டும் பண்ணிடாதிங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times