உலகின் ஆகப் பெரிய பயணிகள் விமானமாகக் கருதப்படும் A380 முதல்முறையாக நீடித்து நிலைத்திருக்கும் விமானத்துறை எரிபொருளில் (SAF)பறந்துள்ளது. துபாயில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட செயல்முறைப் பயிற்சியில் Emirates நிறுவனத்தின் A380 விமானம் பங்கேற்றது
விமானத்தின் 4 இயந்திரங்களில் ஒன்றில் நீடித்து நிலைத்திருக்கும் விமானத்துறை எரிபொருள் (SAF)முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது.Sustainable Aviation Fuels (SAF) எனப்படும் அது சமையல் எண்ணெய், விலங்குகளின் கொழுப்பு, விவசாயக் கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றது.
தற்போது பயணிகள் விமானங்களின் இயந்திரங்களில் வழக்கமான எரிபொருளுடன் SAF எரிபொருள் பாதி அளவில் மட்டுமே பயன்படுத்த அனுமதி உண்டு.SAF முழுமையாகப் பயன்படுத்தப்படும்போது அதன் ஆற்றல் வழக்கமான எரிபொருளின் ஆற்றலுக்கு ஈடாக இருக்குமா என்பது ஆராயப்படுகிறது.SAF எரிபொருளிலிருந்து வெளியாகும் கரியமில வாயு, சாதாரண எரிபொருளைக் காட்டிலும் மிகக் குறைவு.
2050ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை முற்றிலும் குறைக்க அனைத்துலக விமானத்துறை திட்டமிடுகிறது. அதற்கு, SAF முக்கிய பங்காற்றும் என்று கூறப்படுகிறது.
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?